பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஏழு பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், நிர்வாக நலன் கருதி முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் பணியிட மாற்றம்; பள்ளிக் கல்வித் துறை அதிரடி - ஏழு முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்
சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்துவரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஏழு பேரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.
முதன்மைக் கல்வி அலுவலர்கள் 7 பேர் இடமாற்றம்
அதன்படி பணியிட மாற்றம் செய்யப்பட்ட அலுவலர்கள் விவரம்:
- திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி, திருச்சி முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றம்
- திருச்சி முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றம்
- தஞ்சாவூர் முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தா, திருப்பூர் முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றம்
- ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராக பணியாற்றி வரும் ஞானகவுரி, தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றம்
- தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலர் முருகேசன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் துணை இயக்குநராக மாற்றம்
- மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினி, விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றம்
- விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், மதுரை முதன்மைக் கல்வி அலுவலராக மாற்றம்