சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அந்தோணி. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், அந்த பள்ளியில் பொருளாதாரம் பாடம் நடத்தும் ஆசிரியராக பணியாற்றி வந்தார். வெளியூரிலிருந்து வந்து பணியாற்றுவதால் அந்த பள்ளி வளாகத்தில் உள்ள அறையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தற்கொலை : காவல்துறை விசாரணை! - தற்கொலை
சென்னை: பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம்போல் நேற்று வேலை முடிந்து இரவு தனது அறைக்கு சென்ற ஆசிரியர் அந்தோணி காலை வழக்கம் போல பள்ளிக்கு திரும்பவில்லை. காலையில் மற்ற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த நீலாங்கரை காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து அந்த பள்ளிக்கு தற்போது விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.