சென்னை கொருக்குப்பேட்டை பாரதிநகர் வீட்டுவசதி வாரியத்தில் வசித்துவரும் சிவலிங்கம் என்பவரின் இரண்டாவது மகன் இளங்கோவிற்கும் (18) அதேப் பகுதியில் வசிக்கும் அண்ணாதுரை என்பவரின் மூத்த மகளான அர்ச்சனாவிற்கும் (16) காதல் ஏற்பட்டு இருவரும் பல மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அர்ச்சனா பதினோராம் வகுப்பு படித்துவந்தார்.
இந்நிலையில், அர்ச்சனாவின் வீட்டிற்கு அவரின் காதல் விவகாரம் பற்றி தெரியவந்தவுடன் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அதன் விளைவாக இருவரையும் சந்திக்கவிடாமல் அர்ச்சனாவின் பெற்றோர் அவரை வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர்.
இதனால் அர்ச்சனாவை சந்திக்க முடியாமல் மனமுடைந்த இளங்கோ, கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையறிந்த அர்ச்சனா மிகவும் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இரண்டு வாரமாக அர்ச்சனா யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து-வந்துள்ளார்.