ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் உரமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்த அவரின் உடல் நிலையை பரிசோதித்து புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சரவணபவன் ராஜகோபால் மரணம்! - rajagopal death
சென்னை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் சிகிச்சை பலனின்றி காலமானார்.
சரவணபவன் உரிமையாளர் மரணம்
ஆனால், அவரது உடல்நிலை மோசமாக இருந்த காரணத்தினால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது மகன் நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி பெற்றிருந்தார்.
இந்த நிலையில், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜகோபால் சற்று நேரத்திற்கு முன் காலமானார்.