பொள்ளாச்சியில் ஒரு கும்பல் சமூகவலைதளங்களின் மூலம் இளம்பெண்களுடன் பழகி, அவர்களை மயக்கி பாலியல் துன்புறத்தல் செய்து வந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.இதற்கிடையே, இந்த வழக்கில் அதிமுக மூத்த தலைவரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயரமானின் இரு மகன்களுக்கும் நேரடியாக தொடர்பிருப்பதாகவும், அவர்கள் இருவரையும் காப்பாற்றுவதற்காக சிலர் பலிகெடா ஆக்கப்படுவதுமாகவும் தகவல்கள் வெளியாகின.
பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஸ்டாலின் மருமகன் சபரீசன் நோட்டீஸ்! - mk stalin
சென்னை: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல்களை திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் திட்டமிட்டு பரப்பி வருவதாக பொள்ளாச்சி ஜெயரமான் காவல்துறையில் நேற்று புகார் அளித்தார். அந்த புகாரை ஏற்றுக் கொண்ட தமிழக காவல்துறை, சபரீசன் மீது வழக்குப் பதிவு செய்தது.இந்நிலையில், சபரீசன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி அளித்துள்ளதாகவும், இதனால் தமக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் சபரீசன் சார்பில் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.