தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 நிதி: முதல்வர் அறிவிப்பு - unorganized labourers

சென்னை: வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

By

Published : Feb 11, 2019, 12:40 PM IST

சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் விதி எண் 110 கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமாக, "தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் குடும்பங்களுக்கும் அரசின் சிறப்பு நிதியாக தலா 2 ஆயிரம் வழங்கப்படும். மீன்பிடி தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர், மண்பாண்ட தொழிலாளர் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்களுக்கு இந்த நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என அறிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details