தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையால் ஏற்றம் காணும் சைக்கிள் ரிக்ஷா தொழில்! - சைக்கிள் ரிக்சா தொழில்

புதுச்சேரி: நலிவடைந்த சைக்கிள் ரிக்ஷா தொழில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையால் தற்போது ஏற்றம் கண்டுள்ளதையடுத்து, தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால், ஏற்றம் காணும் சைக்கிள் ரிக்சா தொழில்!

By

Published : Apr 12, 2019, 1:40 PM IST

முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கிவரும் புதுச்சேரியில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த சைக்கிள் ரிக்ஷா தொழில், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களால் நாளுக்கு நாள் நலிவடைய ஆரம்பித்தது. சுமார் 3,000 சைக்கிள் ரிக்ஷாக்கள் இருந்த புதுச்சேரியில் தற்போது 35 ரிக்ஷாக்களை மட்டுமே பயணிகள் பயன்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக மீண்டும் சைக்கிள் ரிக்ஷா மீது சுற்றுலாப் பயணிகளின் கவனம் திரும்பியுள்ளது. இதனால் ரிக்ஷா தொழிலாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து பேட்டியளித்த ரிக்ஷா ஒட்டுநர் சங்கர் கூறுகையில், புதுச்சேரிக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பயணம் செய்வதற்கு சைக்கிள் ரிக்ஷாவிற்கு விரும்பி வருகின்றனர். இதனால் குறைந்தது 250 முதல் 500 வரை கிடைப்பதாகவும், இதனைக் கொண்டு தங்கள் குடும்பத்தை நடத்திவருவதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையால், ஏற்றம் காணும் சைக்கிள் ரிக்சா தொழில்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details