தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநிலங்களவை தேர்தல் - இன்று மனுக்கள் மீதான பரிசீலனை - ஜூலை 18

புதுடெல்லி: தமிழகத்தில் காலியாக உள்ள ஆறு மாநிலங்கவை உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை பதவிக்கு-18ஆம் தேதி தேர்தல்

By

Published : Jul 9, 2019, 10:00 AM IST

Updated : Jul 9, 2019, 1:15 PM IST

மாநிலங்களவை உறுப்பினர்களான கே.ஆர்.அர்ஜுனன், கனிமொழி, வி.மைத்ரேயன், ஆர்.லட்சுமணன், டி.ரத்னவேல் மற்றும் டி.ராஜா ஆகிய ஆறு பேரின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே, தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு மாநிலங்கவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முடிவடைந்ததை அடுத்து, மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு ஜூலை 11ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக, மதிமுக, பாமக மற்றும் மூன்று சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒவ்வொரு மாநிலங்களவை வேட்பாளர்களுக்கும் 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை. அவ்வாறு முன்மொழியாத பட்சத்தில், சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும்.

ஆறு வேட்பாளர்களுக்கு மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தால் மட்டுமே தேர்தல் நடைபெறும். இல்லையென்றால் மனு தாக்கல் செய்த ஆறு பேரும் போட்டியின்றி தேர்தெடுக்கப்படுவார்கள்.

Last Updated : Jul 9, 2019, 1:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details