ஜீவஜோதி கணவரைக் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற சரவணபவன் உணவகத்தின் உரிமையாளர் ராஜகோபால், சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவரின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி ராஜகோபால் காலமானார்.
சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்ட ராஜகோபால் உடல்! - சரவணபவன்
சென்னை: ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் கைதாகி உயிரிழந்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலனின் உடலை உடற்கூறு ஆய்வு முடிந்து சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
ராஜகோபாலன்
பின்னர் அவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வு முடிந்த பின்னர், ராஜகோபாலின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புன்னையடி கிராமத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.