தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஃபேல் ஊழல் புத்தகத்தை பறிமுதல் செய்தவர்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவிப்பு! - election work

சென்னை: ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை பறிமுதல் செய்த உதவி செயற்பொறியாளர் கணேஷ், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருவரை தேர்தல் பணியிலிருந்து விடுவித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Rafael book

By

Published : Apr 3, 2019, 3:43 PM IST


எழுத்தாளர் எஸ்.விஜயன் எழுதிய ’நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ புத்தகம் நேற்று மாலை 5 மணிக்கு வெளியிட இருந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளதால் புத்தகம் வெளியிடத் தடை விதித்தனர். மேலும், தேனாம்பேட்டையிலிருந்து 150க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூபேசுகையில், புத்தகத்தை தேர்தல் ஆணையம் தடைசெய்யவில்லை. மேலும், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ புத்தகத்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயத்தில் இந்து என்.ராம் வெளியிட்டார்.

இந்நிலையில், அந்த புத்தகத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், காவலர்கள் தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ விளக்கமளித்திருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details