அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி சென்ற புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
'கிரண் பேடி தரம் தாழ்ந்து பேசி வருகிறார்..!' - நாராயணசாமி! - Puduchery CM Narayanasami
சென்னை: "தமிழ்நாட்டு மக்களை பற்றி கிரண் பேடி தரம் தாழ்ந்து பேசி வருகிறார்" என்று, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சாடியுள்ளார்.
"மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் மாநில முதலமைச்சர்களுடன் நானும் ராகுல்காந்தியை சந்தித்து தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவராக நினைத்து கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு ராகுல்காந்தி மட்டும் பொறுப்பு அல்ல. அனைத்து தலைவர்களும் தொண்டர்களும் பொறுப்பாளர்களும் தான் தோல்விக்கான பொறுப்பை நாங்களும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தேன்.
துணைநிலை ஆளுநரின் கிரண்பேடிக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. தமிழக மக்களை தரக் குறைவாகப் பேச என்ன அருகதை இருக்கிறது. தனக்கு விளம்பரம் வரவேண்டும் என்பதற்காக கிரண்பேடி தரம் தாழ்ந்து பேசுகிறார்" என்றார்.