நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இதில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடந்தது.
இதனால் புதுச்சேரியில் மார்ச் 23ஆம் தேதியே தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தது. இதற்காக முதலமைச்சர் நாராயணசாமி சட்டப்பேரவை அலுவகத்தில் தன்னுடைய அன்றாடப் பணிகளில் இருந்து விலகி இருந்தார்.
இந்நிலையில், 30 நாட்களுக்கு பிறகு இன்று வழக்கம் போல் சட்டப்பேரவைக்கு வந்து தனது வழக்கமான அரசுப் பணிகளை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்தார்.
முன்னதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கேரளா மாநிலம் வயநாட்டில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதால், தேர்தல் பரப்புரைக்காக அவர் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
திரும்பி வந்துட்டேனு சொல்லு: சட்டப்பேரவைக்கு வந்த புதுச்சேரி முதல்வர்!