தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துப்புரவு பணிக்கு முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பம்! - சென்னை

சென்னை: தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள துப்புரவு பணிக்கு முதுகலை பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

jobs

By

Published : Feb 6, 2019, 12:04 PM IST

நாட்டில் வேலைவாய்ப்பு பிரச்னை பெருமளவில் உள்ளதால் வரப்போகும் தேர்தலில் அனைத்து கட்சிகளும் 'அதிகளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதையே' பிரதான வாக்குறுதிகளாக முன்வைக்கின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் துப்புரவு பணிக்காக முதுகலை பட்டதாரிகள் பலர் விண்ணப்பித்து தெரியவந்துள்ளது. மொத்தம் உள்ள 14 காலிப்பணியிடங்களுக்கு நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் எம்.பி.ஏ., எம்.டெக்., எம்.காம். என முதுகலை பட்டம் பெற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

எந்த ஒரு கல்வித்தகுதியும் தேவைப்படாத இப்பணிக்கு கூடுதல் கல்வித்தகுதி கொண்ட பட்டதாரிகள் விண்ணப்பித்தது நாட்டின் கல்வித்தரத்தையும், வேலைவாய்ப்பு குறித்த நிலைமையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details