தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூவிருந்தவல்லியில் மனநலம் குன்றியவர்களுக்கான பள்ளியில் ஆண்டு விழா - மனநலம் குன்றியவர்களுக்கான பள்ளி

சென்னை: பூவிருந்தவல்லியில் செயல்பட்டுவரும் மன நலம் குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளியின் 22 ஆம் ஆண்டு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

பூவிருந்தவல்லி

By

Published : Apr 1, 2019, 8:15 AM IST

சென்னை பூவிருந்தவல்லியில் செயல்பட்டுவருகிறது தொன் குவனெல்லா மனநலம் குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளி. இதன் 22ஆம் ஆண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது.

தொன் குவனெல்லா

இந்த விழாவிற்கு பள்ளி இயக்குநர் லூர்துராஜ் தலைமை தாங்கினார். இவ்விழாவில் சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர் நட்பு, அன்பு என பல்வேறு தலைப்புகளில் நடனமாடி அசத்தினர். குறிப்பாக மனநலம் குன்றிய மாணவர்கள் தமிழர் கலையான சிலம்பாட்டத்தை நிகழ்த்தினர்.

இது வெகுவாக பார்வையாளர்களை கவர்ந்து. இறுதியாக கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறப்பு மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் உள்ளிட்டோருக்கு பரிசுகள், சான்றுகள் வழங்கப்பட்டன.


ABOUT THE AUTHOR

...view details