பொள்ளாச்சி பெண்களை ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு உதவியதாக, அதே பகுதியில் உள்ள துரித உணவகத்தை நடத்திவரும் பிரபு வினோத்தை தாக்கிய 10-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர் தங்களுக்கு பிணை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
பொள்ளாச்சி விவகாரத்தில் உணவகத்தை சேதப்படுத்தியவர்களுக்கு பிணை - POLLACHI ISSUE
கோவை: பொள்ளாச்சி ஆபாச வீடியோ எடுத்த விவகாரத்தில் “பார் நாகராஜனின்” துரித உணவகத்தைச் சேதப்படுத்தியவர்களுக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
bar nagaraj
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 5000 ரூபாய்க்கான பிணை பத்திரமும், இரண்டு பேரின் உத்தரவாதத்துடன் பொள்ளாச்சி முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் பிணை பெற்றுக் கொள்ளலாம். மேலும், பொள்ளாச்சி காவல் நிலையத்தில் விசாரணைக்குத் தேவைப்படும்போது நேரில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கினார்.