தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: மணிவண்ணனை 4 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவு! - கோவை

கோவை: பொள்ளாச்சி பாலியல் விகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில்  மணிவண்ணனை 4 நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

pollachi

By

Published : Mar 29, 2019, 7:13 PM IST


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கடந்த 24ஆம் தேதி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து குற்றவாளிகள் 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகளின் நண்பர்கள் கடந்த மாதம் 26ஆம் தேதி புகாரளித்த சகோதரரை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து தாக்கப்பட்ட அவர் அளித்த புகாரின் பேரில் கடந்த மாதம் செந்தில், பாபு, வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் மணி என்கிற மணிவண்ணன் தலைமறைவானார்.

இதனையடுத்து, தலைமறைவான மணிவண்ணனை காவல்துறையினர் தேடிவந்த நிலையில், கடந்த 25ஆம் தேதி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு சரணடைந்தார்.

இந்நிலையில், மணிவண்ணனை வரும் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்திரவிட்டார். இதில் சிபிசிஐடி காவலில் மணிவண்ணனை 10 நாட்கள் விசாரிக்க அனுமதி வேண்டி விண்ணப்பித்தனர்.

நீதிமன்ற காவலில் இருந்த மணிவண்ணனை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜ் நான்கு நாட்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதியளித்தார். இதனையடுத்து, மணிவண்ணனை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உடற்பரிசோதனை செய்யப்பட்டு விசாரணைக்காக ரகசிய இடத்திற்கு அழைத்துச்சென்றனர். திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மீண்டும் நீதிபதி நாகராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details