தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போலீசார்; வனிதாவிடம் தொடர்ந்து விசாரணை! - evp amusement park

திருவள்ளூர்: மகளை கடத்தியதாக வந்த புகாரை தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சி அரங்கிற்குள் நுழைந்து சுமார் இரண்டு மணி நேரமாக காவல்துறையினர் நடிகை வனிதா விஜயகுமாரிடம் விசாரணை நடத்தினர்.

நடிகை வனிதா விஜயகுமார்

By

Published : Jul 3, 2019, 6:21 PM IST

நடிகர் விஜய்குமாரின் மகள் நடிகை வனிதா விஜயகுமார், ஆனந்த்ராஜ் இருவரும் கடந்த 2007ஆம் ஆண்டில் திருமணமானது. இவர்களுக்கு ஜெனிதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் 2012இல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றனர். தந்தை ஆனந்தராஜ் உடன் மகள் ஜெனிதா வசித்து வந்தார். தீடீரென, பள்ளிக்கு சென்ற மகளை, வனிதா கடத்திச் சென்றுவிட்டதாக ஆனந்தராஜ், தெலுங்கானா காவல்துறையினரிடம் புகாரளித்தார்.

இப்புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் வனிதாவையும், குழந்தையையும் தேடி வந்தனர். இச்சமயத்தில், வனிதா, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் வனிதா விஜய்குமாரையும் அவருடைய மகளையும் தேடி சென்னை வந்த தெலங்கானா காவல்துறையினர், தமிழ்நாடு காவல்துறையின் உதவியை நாடியுள்ளது.

பிக்பாஸ் அரங்கிற்குள் நுழைந்த காவல்துறை! வனிதாவிடம் தொடர்ந்து விசாரணை

நசரத்பேட்டை காவல்துறை உதவியுடன் தெலங்கானா காவலர்கள், வனிதா விஜய்குமாரிடம் விசாரணை நடத்த பூந்தமல்லியில் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் அமைந்துள்ள பிக் பாஸ் அரங்கத்துக்குள் சென்றனர். அங்கு வனிதாவிடம் இரண்டு மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வாரா அல்லது கடத்தல் வழக்கு தொடர்பாக கைது செய்யப்படுவாரா என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

ABOUT THE AUTHOR

...view details