தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்தித்திணிப்பு, 8 வழிச்சாலை விவகாரம் குறித்து ராமதாஸ் கருத்து

மும்மொழி கல்வி மூலம் இந்தி திணிப்பு மற்றும் சேலம் எட்டு வழிச்சாலை விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ramdoss

By

Published : Jun 4, 2019, 12:04 AM IST

மும்மொழி கல்வி குறித்த சட்ட வரைவில் மத்திய அரசு செய்துள்ள திருத்தம் மற்றும் 8 வழிச்சாலைக்கு உயர்நீதிமன்றம் அளித்த தடைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்திருப்பது போன்றவற்றை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டரில் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் ட்விட்டர் பதிவு

அதில் அவர் 'தேசியக் கல்விக் கொள்கையில் இந்திப் பாடம் கட்டாயம் என்ற பரிந்துரை திரும்பப்பெறப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தித் திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த பாட்டாளி மக்கள் கட்சிக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும்! என்று பதிவிட்டிருந்தார்.

ராமதாஸ் ட்விட்டர் பதிவு

மற்றொரு பதிவில், 'சென்னை- சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பது நிம்மதியளிக்கிறது. இந்தத் திட்டத்தால் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் கவசமும், காவலனும் பாமகதான் என்பதை மக்கள் உணர்வார்கள்! என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details