தமிழ்நாட்டில் பான் மசாலா தடை செய்யப்பட்டு உள்ள நிலையில் பெங்களூருவில் இருந்து லாரிகள் மூலம் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கடத்திவந்து மதுரவாயலில் விற்பனை செய்யப்படுவதாக மதுரவாயல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உதவி ஆய்வாளர், காவலர்கள் வழக்கம்போல வாகன சோதனையில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட பான் மசாலா பறிமுதல் - பான் மசாலா பறிமுதல்
சென்னை: தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
பான் மசாலா
அப்போது அங்கு வந்த ஒரு காரை சோதனை செய்ததில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 200 கிலோ குட்கா பான்மசாலா சிக்கியது. மேலும் காரில் வந்த ராமசாமி, வினோத், சதீஷ் ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டத்தில் பான் மசாலா பொருட்கள் பெங்களூரு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டு மதுரவாயல் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தனர். பின்னர் மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.