தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூர கணவன்!- திடுக்கிடும் தகவல்கள் வெளியீடு - பலாத்காரம்

சென்னை: பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் கிடந்த பெண்ணின் உடல் உறுப்புகள், தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், குடும்ப சண்டையில் கணவனே மனைவியை துண்டு துண்டாக வெட்டி வீசியது அம்பலமாகியுள்ளது.

வெட்டப்பட்ட கை, கால்கள்

By

Published : Feb 6, 2019, 5:04 PM IST


கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி பள்ளிக்கரணை காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட 200 அடி சாலை அருகிலுள்ள குப்பைக் கிடங்கினுள், வள்ளூவர் கோட்டத்தில் இருந்து எடுத்து வந்துக் கொட்டப்பட்ட குப்பையில், நெகிழியால் (பிளாஸ்டிக்) சுற்றபட்டு கிடந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் இரண்டு கால்கள், ஒரு கை துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மாநகராட்சி ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் குப்பை கிடங்கிற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார், வெட்டப்பட்ட கை மற்றும் கால்களை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளிக்கரணை கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கைப்பற்றப்பட்ட உறுப்புகள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒரு கை மற்றும் இரண்டு கால்களை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்து மூன்று மருத்துவ உதவிப் பேராசிரியர்கள் கொண்ட குழு தலைமையில் மரபணு சோதனைக்கு திசுக்களை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியிருந்தனர். உடல் உறுப்புகள் எந்த ஆயுதம் பயன்படுத்தி வெட்டி இருப்பார்கள் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் இயந்திரம் மூலமாக வெட்டபட்டிருக்கலாம் என தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக துப்பு எதுவும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர். எனினும் விசாரணையை வேகமாக செய்து வந்தனர். இதில் கிடைத்த திடுக்கிடும் தகவல்கள் போலீசாரை அதிர வைத்தது.

விசாரணையில், பள்ளிக்கரணை குப்பையில் இருந்து எடுக்கப்பட்ட பெண் உடல் உறுப்புகள் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும் குடும்ப சண்டையில் கணவனே துண்டு துண்டாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்து குப்பைத் தொட்டியில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விரைந்துசென்று கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் ராமகிருஷ்ணன் திரைத்துறையைச் சேர்ந்தவர் என்பதும், காதல் இலவசம் எனும் திரைப்படத்தை எடுத்து வருகிறார் என்றும் குடும்ப பிரச்னை காரணமாக கொலை செய்ததும் தெரியவந்தது.

ABOUT THE AUTHOR

...view details