வேலூர் தொகுதியைத் தவிர்த்து தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
அமித்ஷாவை சந்திக்கிறார் பழனிசாமி! - tnelection
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிச்சாமி
2019-05-20 17:40:16
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மே 21 பாஜக தலைவர் அமித் ஷாவை சந்திக்கிறார். அங்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களை நேரில் அழைத்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், அதற்காக பாஜக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களை டெல்லிக்கு அமித் ஷா அழைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து மே 21 காலை 9.50 மணிக்கு கோவையிலிருந்து விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார் என்றும் அதிமுக வட்டாரத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
Last Updated : May 21, 2019, 7:45 AM IST