இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் 7 ஆம் தேதி வரை உடல் உறுப்பு தான விழிப்புணர்வு - நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. குடும்பத்தில் ஒருவர் இறக்கும்போது உள்ள துயரத்திலும் உடல் உறுப்பு தானம் செய்வதால் 7 முதல் 11 பேருக்கு மறுவாழ்வு அளிக்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட குடும்பங்களுக்கு இன்றைய அரசு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
'உடலுறுப்பு தானம் செய்ய அரசு மருத்துவமனைக்கே முன்னுரிமை' -விஜய பாஸ்கர்
சென்னை: ராயபுரத்தில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடலுறுப்பு தானம் செய்ய வந்தால் அரசு மருத்துவமனைக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் உடல் உறுப்பு தானம் மக்களின் இயக்கமாக மாற வேண்டும் என்பது அரசின் நோக்கமாக உள்ளது. உடல் உறுப்பு தானம் ஆன்லைன் மூலம் மிகவும் வெளிப்படைத்தன்மையாக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் உடலுறுப்பு தானம் செய்ய வந்தால் அரசு மருத்துவமனைக்கே முன்னுரிமை அளிக்கப்படும். ஒருவேளை அங்கு நோயாளிகளுக்குத் தேவை ஏற்படவில்லை என்றால்தான் முறைப்படி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். இச்செயல் மிகவும் வெளிப்படைத் தன்மையுடனும், எந்த ஒரு குற்றச்சாட்டுக்கும் இடம் இல்லாமலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பதால் மத்திய அரசின் விருதை தொடர்ந்து 4 ஆண்டுகளாகத் தமிழ்நாடு பெற்று வருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.