சென்னை மண்ணடியில் இயங்கி வரும் 'ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்' அலுவலகத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலர்கள் இன்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மத்திய உளவுத்துறையிடம் இருந்து வந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எஸ்.பி ராகுல் தலைமையில் சோதனை நடந்தது. காலை முதல் நடைபெற்ற என்ஐஏ சோதனை மதியம் முடிவடைந்தது. அங்கிருந்த உஸ்மான் மற்றும் இஸ்மாயில் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தினர்.
சென்னையில் என்ஐஏ திடீர் சோதனை! - ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்
சென்னை: மண்ணடியில் உள்ள 'ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்' அலுவலகத்தில் என்ஐஏ அலுவலர்கள் நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
என்ஐஏ
விசாரணையின் முடிவில் அலுவலகத்தில் இருந்து பல முக்கிய ஆவணங்களை என்ஐஏ அலுவலர்கள் எடுத்துச் சென்றனர். உஸ்மான் மற்றும் இஸ்மாயிலை இன்று மாலைக்குள் கிண்டியில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் கொடுத்துச் சென்றனர். இந்த அலுவலகத்திற்கும் 'வஹாபி இஸ்லாம்' என்ற அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.