தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செய்தி வெளியிட்டதற்காகச் சம்மன் அனுப்பி விசாரணையா? - நக்கீரன் வழக்கறிஞர் - நக்கீரன்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பாகச் செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன் கோபால் அவர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு சம்மனை அனுப்பியதைத் தொடர்ந்து நக்கீரன் கோபால் தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் பேசியபோது, செய்தி வெளியிட்டதற்காகச் சம்மன் அனுப்புவீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நக்கீரன் கோபால்

By

Published : Mar 15, 2019, 3:13 PM IST

பொள்ளாச்சி பாலியல் வன்முறையைத் தோலுரித்துக் காட்டும் விதமாக நக்கீரன் பத்திரிக்கை காணொளிஒன்றை வெளியிட்டது. அதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக ஜெயராமன் கொடுத்த மனுவின் பெயரில், மத்திய குற்றப்பிரிவு நக்கீரன் கோபால் அவர்களுக்கு சம்மன் அனுப்பியது.

இது தொடர்பாக நக்கீரன் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். இது குறித்து அவர் பேசுகையில், ”பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக நக்கீரன் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டதை வைத்து எப்படி சம்மன் அனுப்ப இயலும். எதற்காக இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்ற விளக்கத்தையும் அளிக்கக் கோரி கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் இருக்கும் இந்த வழக்கை வைத்து, செய்தி வெளியிட்டதற்காக சம்மன் அனுப்பி விசாரணை செய்ய இயலாது எனவும் மானநஷ்ட வழக்கு தொடர்ந்து நஷ்டஈடு மட்டுமே கோர இயலும் எனவும் தெரிவித்தார். மேலும், இது பற்றி அவர்களின் விளக்கத்தை பெறக் காத்திருப்பதாகவும் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வரத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details