வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் முன்னாள் காவல் துறை இயக்குனர் மவுரியா போட்டியிடுகிறார். அவர் இன்று வடசென்னை நாடாளுமன்றத் தேர்தல் நடத்தும் அலுவலர் திவ்யதர்ஷினியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
'வடசென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னையை சரி செய்வேன்' - மநீம வேட்பாளர் உறுதி!
சென்னை: "வடசென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னையை சரி செய்வேன்" என்று, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மவுரியா உறுதியளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மவுரியா கூறியதாவது,
வடசென்னையில் பல ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றி உள்ளேன். இந்தப் பகுதி மக்களின் பிரச்னைகள் எனக்கு நன்கு தெரியும். அவற்றைத் தீர்ப்பேன் என்று உறுதி மொழியை அளித்து வாக்கு கேட்பேன். குடிநீர், போக்குவரத்து, மாணவர்கள், மகளிர் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளையும் என்னால் முடிந்த வரை தீர்த்து வைத்துள்ளேன். அதே முனைப்புடன் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றால் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வடசென்னையில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது 1900ஆம் ஆண்டு, நான் பணியில் வந்ததுமுதல் இன்று வரை தீர்க்கப்படாமல் இருக்கிறது.