தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்றம் உத்தரவிட்டும் 8 வழிச்சாலை திட்டமா! கொதித்த ஸ்டாலின் - cogress

சென்னை: திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்கையில், 'நீதிமன்றம் உத்தரவிட்டும் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை அமல்படுத்துவோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகிறார்' என்று குற்றம்சாட்டினார்.

திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பரப்புரை செய்தார்.

By

Published : Apr 16, 2019, 3:45 PM IST


மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 15ஆம் தேதி பரப்புரை செய்தார்.

அப்போது பேசிய அவர், இந்தக் கூட்டத்தை பார்த்து நான் சென்னையின் மற்றப்பகுதிகளில் பரப்புரை செய்ய வேண்டாம் போல் உள்ளது. ஏனென்றால் நீங்கள் அவ்வளவு ஆதரவு தந்து உள்ளீர்கள் என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் சொல்கிறார் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நாங்கள் அமல்படுத்துவோம் என்று... அந்த மேடையிலும் உடன் ராமதாஸ் இருந்தார். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் ஒரு மத்திய அமைச்சர் இப்படி கூறுகிறார் என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் பரப்புரை செய்தார்.

ABOUT THE AUTHOR

...view details