ஜூன் மாதத்திற்கான ஊதியத்தில் சரி பாதி மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முழு ஊதியம் மாலைக்குள் செலுத்தப்படும் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் - ஜூன் மாத ஊதியம்
சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான ஜூன் மாத ஊதியம் இன்று மாலைக்குள் முழுமையாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வங்கி விடுமுறை என்பதால் மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களின் முழு ஊதியமும் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றார்.
போக்குவரத்து ஊழியர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்கள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.