புதுச்சேரியில் உள்ள பாரதி, சுதேசி, ரோடியர் உள்ளிட்ட பஞ்சாலைகளில் 15 ஆயிரம் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். தற்போது 600 க்கும் குறைவான தொழிலாளர்களே உள்ளனர். மேலும், ஆட்குறைப்பு, ஊதிய பாக்கி உள்ளிட்ட பல்வேறு நிலை உருவாகியுள்ளது.
ஊதிய பாக்கியை தரக்கோரி கஞ்சி காய்ச்சிய பஞ்சாலை தொழிலாளிகள்! - பஞ்சாலை
புதுச்சேரி: நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை உடனே வழங்ககோரி புதுச்சேரி அரசு பஞ்சாலை தொழிலாளிகள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஊழியர்களுக்கு கடந்த 8 மாதங்களாக வழங்கப்படாத ஊதியம் மற்றும் 2018ம் ஆண்டுக்கான ஊக்குவிப்பு ஊதியம் ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுதேசி பஞ்சாலை முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், புதுச்சேரி ஆளும் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான போட்டியினால் பஞ்சாலை தொழிலாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு கவனம் செலுத்தாமல் உள்ளது எனக்கோரி முழக்கமிட்டனர். மேலும், கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.