தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்லாவரம் மருத்துவக் கழிவு குடோனில் திடீர் தீ விபத்து! - Medical waste guton

சென்னை: கிரிதரன்பல்லாவரம் அருகே மருத்துவக் கழிவு குடோன் திடீரென தீப்பற்றி நச்சு கலந்த காற்று வெளியேறுவதால், அப்பகுதி மக்கள் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

fireaccident

By

Published : Feb 6, 2019, 11:49 AM IST

சென்னை மாவட்டம் தாம்பரத்தை அடுத்த கிரிதரன்பல்லாவரம் அடுத்த பொழிச்சலுார் மறைமலை நகர் அருகில் உள்ள கெருகம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மருத்துவக் கழிவு சேகரிக்கும் குடோன் உள்ளது.

இந்நிலையில் அந்த மருத்துவக் கழிவு சேகரிக்கும் குடோனில் திடீரென தீப்பற்றியது. குடோனில் மளமளவென தீப்பற்றி எரிவதால் அந்த இடமே புகை மூட்டம்போல் காட்சியளிக்கிறது.

குடோனில் உள்ள மருத்துவக் கழிவுகள் தீப்பற்றி எரிவதால் நச்சுகலந்த காற்று வெளியேறி வருகிறது. இதனால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருகம்பாக்கம் தீயணைப்புப் படையினர் பல மணி நேரமாக தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.

இந்த சூழலில், அப்பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல் அப்பகுதியை விட்டு வெளியேறி அருகிலுள்ள பகுதிக்கு செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details