தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏசி பெட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் - கொலையா என போலீஸ் விசாரணை! - ரயில்வே போலீஸ்

சென்னை: ஐசிஎஃப் பணிமனையில், ரயிலின் ஏசி பெட்டிக்குள் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏசி பெட்டியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் - கொலையா என போலீஸ் விசாரணை

By

Published : May 20, 2019, 7:07 PM IST

சென்னையில் இருந்து டெல்லி செல்லும் விரைவு ரயிலின் உள்ள ஒரு ஏசி பெட்டியானது பராமரிப்பு பணிக்காக கடந்த 15ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.இந்த நிலையில், ரயில்வே பணிமனை ஊழியர்கள் அந்தப் பெட்டிக்குள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே பெட்டியின் உள்ளே சென்று பார்த்தபோது, பெட்டியில் உள்ள இருக்கையில் அமர்ந்தவாறு 60 வயதான ஒருவரின் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், உடனே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவம் தொடர்பாக பெரம்பூர் ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த நபர் சென்னை வேப்பேரியில் உள்ள தேவாலயம் ஒன்றில் உறுப்பினராக இருந்து வருவதும், அவர் பெயர் சில்வெஸ்டர் பிராக்ஸ்டன்ஸ் எனவும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர், அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details