சென்னை தி.நகரில் தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்த்தல் போன்ற சிறப்புப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்ப்படும் என்றும், அதற்காக ஏழு திறன்களை உள்ளடக்கிய சிறப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இயக்குநர் ரஞ்சித் கருத்துக்கள் ஆய்வுக்குட்படுத்தப்படும் - மாஃபா பாண்டியராஜன் - மாஃபா பாண்டியராஜன்
சென்னை: இயக்குநர் ரஞ்சித் கூறிய கருத்துக்கள் பிரிவினையை ஏற்படுத்தாதவாறு ஆய்வுக்குட்படுத்தபட்டு உண்மைகள் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.
மேலும், "ஒரு சில வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் சில புள்ளிகளை மட்டும் இணைத்து ரஞ்சித் ராஜராஜசோழன் குறித்து பேசியிருக்கிறார். அதே நேரத்தில் ராஜராஜசோழனின் சாதனைகளை ரஞ்சித் இல்லை என கூறவில்லை. வரலாற்றை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு ரஞ்சித் பேசுவது நல்லது. அவர் கூறிய கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதிலுள்ள சாதக பாதகங்களை கண்டுபிடித்து இளைய தலைமுறையினருக்கு கூற வேண்டும்" என்றார்.
நாடாளுமன்றத்தில் தமிழ நாட்டின் எம்.பி.க்கள் பதவியேற்கும் போது தமிழ் வாழ்க! என்று கூறியதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கோபமடைந்தது குறித்த கேள்விக்கு பதில் கூற விரும்பவில்லை என்று கூறினார்.