தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டப்படிப்பு படிக்கும்போதே மாணவர்களுக்கு முழு பயிற்சி - அம்பேத்கர் பல்கலை.

சென்னை: சட்டப்படிப்புக்கு தொழிற்கல்வி அங்கீகாரம் கிடைத்துள்ளதால் மாணவர்கள் மருத்துவக் கல்வியை போன்று முழு பயிற்சி அளித்து அனுப்பப்படுவார்கள் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர் சூரிய நாராயண சாஸ்திரி தெரிவித்தார்.

Law professional course introduced for student - VC

By

Published : Apr 12, 2019, 10:08 AM IST

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'சட்டப் படிப்பை தமிழ்நாடு அரசு தொழில் கல்வியாக மாற்றம் செய்து அறிவித்துள்ளது. இதனால் மருத்துவக்கல்வி, பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது போல் முழுமையாக பயிற்சி அளிக்க வேண்டும்.

சட்டப் படிப்பிற்கான மதிப்பும் அதிகரித்துள்ளது. அகில இந்திய பார் கவுன்சில் சிறந்த வழக்கறிஞர்களை உருவாக்க வேண்டுமென கூறியுள்ளது. அந்த விதியின் அடிப்படையிலும், சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும் என்பதற்காகவும் சென்னை தரமணியில் உள்ள சீர்மிகு சட்டப் பள்ளி வளாகத்தில் ரூ.15 கோடி செலவில் சட்ட பயிற்சி ஆய்வகம் அமைத்துள்ளோம்.

மேலும் சட்ட மாணவர்களுக்கு மக்களுடன் பழகுவது எப்படி? சட்ட ஆவணங்களை எழுதுவது எப்படி? நீதிமன்றத்தில் வாதங்களை எடுத்து வைப்பது எப்படி? போன்றவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சிலரும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர் என்று துணை வேந்தர் சூரிய நாராயண சாஸ்திரி தெரிவித்தார்.

சூரிய நாராயண சாஸ்திரி

ABOUT THE AUTHOR

...view details