இதுகுறித்து சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்து திருப்பி அனுப்பியதை 19 மாதங்கள் காலதாமதம் செய்துள்ளது. இதனால் தற்போது மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட முடியவில்லை என்றார்.
‘மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அடிமையாகவுள்ளது’ - கே.ஆர்.ராமசாமி! - Congress
சென்னை: மத்திய அரசிடம் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அரசு முன்வரவில்லை என்றும், இது குறித்து எங்களைப் பேச அனுமதிக்காததையும் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், இந்த தீர்மானம் கொண்டு வந்தது காங்கிரஸ் தான் என குற்றம்சாட்டினார். அதற்கு நாங்கள் எழுந்து நீங்கள் கூறியது தவறு என்றோம். காங்கிரஸ் கட்சி கூறியது என்னவென்றால், நீட் தேர்வை விரும்பும் மாநிலங்கள் பின்பற்றலாம் என்றோமே தவிர, கட்டாயப்படுத்தவில்லை.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கினார். அவர்களைப் போல் இந்த அரசாங்கம் நீட் தேர்வை அணுகவில்லை. மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளனர். தமிழ்நாடு மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றி வருகின்றனர். மத்திய அரசிடம் இருந்து வந்த மசோதாவை அனுப்பி மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற முன்வரவில்லை. மேலும் இதை பற்றி பேச எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் என கூறினார்.