தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய ஜாக்டோ ஜியோ! - Jacto Jio hunger strike

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

By

Published : Jul 2, 2019, 5:59 PM IST

Updated : Jul 2, 2019, 10:24 PM IST

2019-07-02 17:55:25

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எழிலகம் வளாகத்தில் 9ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

இதுகுறித்து ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்,  "ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினோம்.

இதனையடுத்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட 5,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு போடப்பட்டு தற்போது வரை காவல் நிலையத்திற்கு சென்று மாதம்தோறும் கையெழுத்து போட்டு வருகிறோம்", என்றார். 

மேலும் பேசிய அவர், "தங்களின் ஒன்பது அம்ச கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 9ஆம் தேதி விடுமுறை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட உள்ளோம்" என்றார்.

Last Updated : Jul 2, 2019, 10:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details