கூட்டுறவுத் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரைவில் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் மற்ற மாநிலங்களில் பொது விநியோகத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்க அறிவுறுத்தல்! - Cooperative ministry
நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கூட்டுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் செல்லூர் ராஜு
இதுமட்டுமின்றி ஒரு சில இடங்களில் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரசி சரியான தரத்தில் இல்லாமல் இருப்பதாகவும் ஒருவித துர்நாற்றம் அடிப்பதாகவும் வந்த புகார் தொடர்பாக அலுவலர்களிடம்விளக்கம் கேட்கப்பட்டது.