சர்வதேச புகையிலை ஒழிப்பு தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைமை மருத்துவர், மருத்துவர்கள், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அடையாறு புற்றுநோய் மருத்துவர் சாந்தா பேசுகையில், ‘கேன்சர் நோய்க்கு 64 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகிறோம். இருந்தாலும் புற்றுநோய் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இதில் ஆண்களுக்கு மட்டுமல்லாமல் பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோயை அதிகமாக வருகிறது.
பெயரளவில் மட்டுமே புகையிலை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி வளாகங்களில் புகையிலை விற்பனையை தடை செய்யப்பட்டிருந்தாலும் விற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது. இது தொடர்பாக காவல் துறையினரிடம் புகார் அளித்தால் அலட்சியப் போக்குடன் செயல்படுகின்றனர்’ என்றார்.
வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தா.வெள்ளையன் இதனையடுத்து பேசிய வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் தா.வெள்ளையன், ‘புகையிலை உடல் நலத்திற்கு கேடு. இது ஒருவரை மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பாதிக்கும். அதனால் தமிழ்நாட்டில் நாளை புகையிலை விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதில் பள்ளி வளாகங்களில் புகையிலை விற்பனை செய்பவர்கள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.