இன்றைய கால மனிதர்கள் அனைவரும் இயந்திர முறையில் படு பிசியாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வேலைக்கு சரியான நேரத்திற்குச் செல்லவேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும், வீட்டில் வேலை செய்ய வேண்டும் போன்ற பல காரணங்களால் அனைவரும் பயங்கர பிசி...பிசி...பிசி... இப்படி ஒவ்வொன்றிற்காகவும் ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் தங்களின் உடல்நலனில் அக்கறை கொண்டுள்ளார்களா? என்ற கேள்விக்கு பலரிடம் பதிலே இல்லை என்று கூறலாம்.
காலையில் வேலைக்கு செல்ல வேண்டும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதால், அவசரம், அவசரமாக கிளம்பும் பெரும்பாலோரின் காலை உணவு என்னவென்றால், ஒரு குவளை டீ, காபி, பால்தான். இல்லையென்றால், காலை உணவே எடுத்துக்கொள்வதில்லை. இவர்கள் வேலையில் காட்டும் அக்கறையை, தங்களது உடல்நலன் மீது செலுத்துவதில்லை.
இப்படி காலை உணவை அனைவரும் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், நாளடைவில் அல்சர் தான் வரும். இந்த அல்சர் தொடர்ந்தால், புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்று நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரியும்.
அல்சர் என்றால் என்ன?
சரியாக உணவு எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்.
நமது இரைப்பையில் ஹெச்.சி.எல். என்ற சுரப்பியானது, நாம் உணவு சரியான நேரத்திற்கு உட்கொள்ளாத நிலையில், அதிக அளவு சுரக்கும். இவை பசியைத் தூண்டக்கூடிய அமிலமாகும்.
வெறும் வயிற்றில், அதாவது உணவு உட்கொள்ளாமல் பசி ஏற்பட்டு இருந்தால், இந்த ஹெச்சிஎல் அமிலம் சுரந்து இரைப்பை, குடலில் அரிமானத்தை (அரிப்பை) ஏற்படுத்தும்.
இவ்வாறு நாம் தினமும் உணவை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்ளவில்லை என்றால், இந்த அமிலத்தின் செயல் நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அல்சர் ஏற்படும்.
பின்னர், இந்த அல்சர் தொடர்ந்தால் குடல் (அ) இரைப்பையில் புண் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும். பின்னர் கேன்சர் உண்டாகும் ஆபத்துள்ளது.
அல்சரின் அறிகுறிகள்:
முதலில் வாயில் துர்நாற்றம் வீசும். பின்பு வாய்ப்புண் ஏற்படும். அடிக்கடி வயிறு வலி ஏற்படும். இவை அடிக்கடி தொடர்ந்தால், உணவு உட்கொள்ள முடியாமல் வாந்தி ஏற்படும்.
அல்சர் உண்டாவதற்கான காரணங்கள்:
1. வெறும் வயிற்றில் அதிக ஸ்ட்ராங்கான டீ, காபி உட்கொள்ளுதல்.
2. ஆல்கஹால், காரம், புளிப்பு போன்வற்றை அதிகமாக உணவில் சேர்த்தல்.
3.காலை உணவு என்ற ஒன்றை எடுத்துக்கொள்ளாமலே இருத்தல்.
அல்சர் என்பது நாம் உணவு எடுத்துக்கொள்ளாததால் வருவதே என்று சாதாரணமாக நினைக்கிறோம். ஆனால், அல்சரில் நிறைய வகை இருக்கு.
அல்சரின் வகைகள்:
1. கேஸ்ட்ரிக் அல்சர் (Gastric Ulcer)