தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழ்நாடு அரசு ஏப்ரல் 1ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதில் நீதித்துறை சாரா உறுப்பினராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் ராஜாராம் நியமிக்கப்பட்டதற்கு தடை கோரியும், அவரது நியமனத்தை ரத்து செய்து தகுதியானவரை நியமிக்கக் கோரியும் வழக்கறிஞர் அப்துல் ரஹ்மான் சேட் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக பதவி வகித்த எவருக்கும் மத்திய, மாநில அரசுகளின் கீழ் பணி நியமனம் வழங்கக் கூடாது என இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகிறது என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.