சென்னை நம்மாழ்வார் பேட்டை பகுதியில் வசித்து வருபவர் மாரீஸ்வரன் வயது 30. இவர் கடந்த மூன்று வருடங்களாக ஓட்டேரி பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இரண்டு லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: ஐந்து பேர் கைது! - ஐந்து பேர் கைது
சென்னை: குடோனில் பதுக்கி வைத்திருந்த 2 லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்த காவல் துறையினர் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.
Gutkha seized, 5 accused arrested
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், குடோனில் பதுக்கி வைத்திருந்த சுமார் இரண்டு லட்சம் மதிப்புள்ள குட்கா, ஹான்ஸை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கடையின் உரிமையாளர் மாரீஸ்வரன், ஊழியர்கள் சோலை ராஜதுரை, விக்னேஷ், கார்த்திக் செல்வம், மான்ராஜ், ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சென்னையில் விற்பனை செய்ய பெங்களூருவிலிருந்து கடத்தி வரப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.