தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப் பணியாளர் தேர்வு தேதியில் மாற்றம்!

சென்னை: மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ளதால் அரசுப் பணியாளர் தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டு மே 5 மற்றும் 11ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அரசுப் பணியாளர் தேர்வு தேதியில் மாற்றம்!

By

Published : Apr 7, 2019, 2:54 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ’தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் பின்வரும் தேர்வுகளை வருகின்ற 20.4.2019 அன்று முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை தொழில் நுட்ப உதவியாளர், 21.4.2019 அன்று வேதியியலர், இளநிலை வேதியியலர், உதவி புவியியலர், புவி வேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் தேர்வுகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம், மக்களவைகளுக்கான தேர்தலை வருகின்ற 18.04.2019 அன்று தமிழ்நாட்டில் நடத்துவதாக அறிவித்துள்ளது. இத்தேர்தலைக் கருத்தில் கொண்டு, நிர்வாக காரணங்களுக்காக 20.04.2019 மற்றும் 21.04.2019 அன்று நடைபெறவிருக்கும் எழுத்துத் தேர்வுகளை மாற்றம் செய்து அறிவிக்கப்படுகிறது.

முதுநிலை தொழில்நுட்ப உதவியாளர் / இளநிலை தொழில் நுட்ப உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு 11.5.2019 அன்றும், 05.05.2019 அன்று வேதியியலர், இளநிலை வேதியியலர், உதவி புவியியலர், புவி வேதியியலர், அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் துணை கண்காணிப்பாளர் ஆகிய பணிகளுக்குத் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைபெறும்.

மேலும், 05. 05.2019 அன்று ஏற்கனவே நடைபெறுவதாகத் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்த கணக்கு அலுவலருக்கான எழுத்துத் தேர்வும், 11. 5.2019 / 12. 5.2019 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அரசு குற்றவியல் உதவி வழக்கறிஞர் (நிலை 2) முதன்மை எழுத்துத் தேர்வும், ஏற்கனவே அறிவித்தவாறு அதே தேதிகளில் நடைபெறும்’ என்று அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details