தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

12ஆம் வகுப்பில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடும் சரிவு! - தேர்ச்சி விகிதம்

சென்னை: அரசுப் பள்ளிகளின் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கிடுகிடுவென சரிந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

12ஆம் வகுப்பில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடும் சரிவு!

By

Published : Apr 26, 2019, 12:02 AM IST

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்த புள்ளி விபரங்கள் தற்போது வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதிய 2,700 அரசுப் பள்ளிகளில், வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு மாறாக 1,200 தனியார் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன.

2018ஆம் ஆண்டு 238 அரசுப் பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெறும் 80 பள்ளிகள் மட்டுமே 100 விழுக்காடு தேர்ச்சியைப் பெற்றிருப்பது கல்வித்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் இயற்பியல், வேதியியல், உயிரியல் என முக்கிய பாடங்களில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவர்கள் எண்ணிக்கையும் பெரிய அளவிற்கு இல்லை என்றும், இரட்டை இலக்க எண்களில் மட்டுமே மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகபட்சமாக கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 1,500 பேரும், கணக்குப்பதிவியல் பாடத்தில் 1,200 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details