சித்திரை 1ஆம் தேதியையொட்டி தமிழ் புத்தாண்டு தினம் நாளை மாநிலம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
‘கலாச்சாரம் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் தமிழ் புத்தாண்டாக இருக்கட்டும்’ - ஆளுநர் வாழ்த்து! - tamil nadu governor general
சென்னை: கலாச்சாரம் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் தமிழ் புத்தாண்டாக இருக்கட்டும் என சித்திரை தமிழ் புத்தாண்டு தினத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு ஆளுநர் வாழ்த்து
இதையடுத்து தமிழ்நாட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது,
நம்பிக்கை, மகிழ்ச்சி அளிக்கும் ஆண்டாக தமிழ் புத்தாண்டு அமையட்டும் என்றும், கலாச்சாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதாகவும் அவர் தனது வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.