கோபால்சாமி ஜூன் 2006 முதல் ஏப்ரல் 2009 வரை தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றியுள்ளார். பத்ம பூஷண் விருதும் பெற்றுள்ள இவரது பணிக்காலத்தின்போது மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நாடு முழுவதும் அனைத்து தேர்தல்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துவரும் நிலையில், கோபால்சாமி அது குறித்து விளக்கமளித்துள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்தவர்கள்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும் மேலை நாடுகளில் அது பயன்படுத்தவில்லை என்ற பொய்யைக் கூறி வருகின்றனர். 'டி ஆர் எஸ்' எனப்படும் இந்தக் கருவி பல வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் எலக்ட்ரானிக் வோட்டிங் மிஷின் பயன்படுத்தப்படுகிறது.