வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபானி புயல் மே 3ஆம் தேதி ஒடிசாவில் கரையைக் கடக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி ஒடிசாவின் கோபால்புர் - சந்தபாலி இடையே கரையைக் கடக்கும்போது மணிக்கு 200 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்திருந்தது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளுக்குச் செல்லும் விரைவு தொடர் வண்டிகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
இன்று (மே 2) ரத்து செய்யப்படும் தொடர்வண்டிகள்:
- வண்டி எண் 12841: ஹவுரா- சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில்
- வண்டி எண் 12842: சென்னை சென்ட்ரல்- ஹவுரா கோரமண்டல் விரைவு ரயில்
- வண்டி எண் 12663: ஹவுரா-திருச்சிராப்பள்ளி விரைவு ரயில்
- வண்டி எண் 12863: ஹவுரா-யஷ்வந்த்பூர் விரைவு ரயில்
- வண்டி எண் 12839: ஹவுரா-சென்னை சென்ட்ரல் மெயில்
- வண்டி எண் 22644: பாட்னா-எர்ணாகுளம் விரைவு ரயில்
- வண்டி எண் 06057: சந்திரகாசி-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில்
- வண்டி எண் 12508: சில்சார்- திருவனந்தபுரம் விரைவு ரயில்