தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டிலும் குண்டு வெடிக்கும்! பரபரத்த போலீஸ் - fake call

சென்னை: இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல் போன்று மூன்று மாதத்துக்குள் தமிழ்நாட்டிலும் நடக்கும் என்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த காணொளியால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் குண்டு வெடிக்கும்: பரபரப்பை ஏற்படுத்திய அழைப்பு!

By

Published : Apr 29, 2019, 2:27 PM IST

Updated : Apr 30, 2019, 10:00 AM IST

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு காணொளிப் பதிவு ஒன்றை அனுப்பிய நபர், இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதல் போன்று தமிழ்நாட்டிலும் மூன்று மாதத்துக்குள் மிகப்பெரிய குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்படும்.

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்துதான் பயங்கரவாதிகள் சென்றனர். இதற்கு மதுரை ஆட்சியர் உடந்தை என சொல்லியதோடு, மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை பதிவு செய்து அனுப்பியுள்ளார். இதனால், காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த சாமி என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பு விடுத்த நபர்

அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Last Updated : Apr 30, 2019, 10:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details