தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் தமிழ் செயலியை பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்! - ETV Bharat Tamil

இந்தியாவில் மிகப் பெரும் ஊடகமான ஈடிவி பாரத் இன்று உதயமாகியுள்ளது. ஈடிவி பாரத் தமிழ் செயலியை பிரபல பாடகர் பத்மஸ்ரீ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

ETV Tamil

By

Published : Mar 21, 2019, 5:36 PM IST

Updated : Mar 21, 2019, 8:03 PM IST


உலகமயமாக்கலில் நாளுக்கு நாள் நவீன தொழில்நுட்பம் நம்மை மேம்படுத்தி, சில வேலைகளை துரிதப்படுத்தியும் கொடுக்கிறது. அந்த உலகமயமாக்கலின் வளர்ச்சிக்கு ஊடகத்தின் பங்கு மிகப்பெரியது. அது மட்டுமின்றி ஊடகத்தின் பரிணாம வளர்ச்சியும் அசுரவேகத்தில் இருந்து வருகிறது. இதுபோன்ற ஒரு சூழலில் உண்மைத்தன்மை மாறாமல் செய்தியை உடனுக்குடன் பயனாளர்களின் கைகளுக்கு கொண்டு செல்வதற்கான முதல் அடியை எடுத்து வைக்கிறது ராமோஜி குழுமத்தின் ஈடிவி பாரத்.

உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் நம் கைக்குள் அடங்கும் அளவுக்கு நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், செய்திகளை கடந்து, பொது சமூகம் தெரிந்து கொள்ள வேண்டியவற்றையும் மிக எளிதாக வழங்குகிறது ஈடிவி பாரத். பயனாளர்கள் எங்கே இருந்தாலும், அவர்களின் பார்வைக்கு செய்திகளை கொண்டு சேர்க்கும் விதமாக 'ஒரே தேசம்; ஒரே செயலி' என்ற அடிப்படையில், 29 மாநிலங்களுக்கான செய்திகளையும், தகவல்களையும் 13 இந்திய மொழிகளில் வழங்குகிறது ஈடிவி பாரத்.

பரந்து விரிந்து பெரிய சாம்ராஜ்யமாய் திகழும் நமது ஈடிவி பாரத்தின் செயலியை மக்களின் பயன்பாட்டிற்காக இன்று காலை 11.16 மணிக்கு ராமோஜி குழுமத்தின் தலைவர் ராமோஜி ராவ் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன்படி ஈடிவி பாரத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் மொழிக்கான மொபைல் செயலியை பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபல பாடகர் பத்ம ஸ்ரீ எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

ஈடிவி பாரத்தின் ஆங்கிலம்-ஹிந்தி ஆகிய மொழிகளுக்கான மொபைல் செயலியை துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார்.

ஈடிவி பாரத்தின் தெலங்கானா மாநிலத்திற்கான தெலுங்கு மொபைல் செயலியை ராமோஜி குழுமத் தலைவர் ராமோஜி ராவும், ஆந்திராவுக்கான தெலுங்கு செயலியை ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடும், மலையாளத்திற்கான செயலியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் தொடங்கி வைத்தனர்.

கன்னடாவுக்கான செயலியை கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமியும், டெல்லிக்கான செயலியை அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும், ஒடியாவுக்கான செயலியை ஒடிசா ஆளுநர் கணேஷி லாலும், அஸ்ஸாமிக்கான செயலியை அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவாலும் தொடங்கி வைத்தார்கள்.

பஞ்சாபிக்கான செயலியை தடகள விளையாட்டு வீரர் மில்கா சிங், வங்காள மொழிக்கான செயலியை மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திர்பாதி, குஜராத்திக்கான செயலியை குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி, மராத்திக்கான செயலியை மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஷ் ஆகியோர்களால் தொடங்கி வைக்கப்பட்டன.

அரபி மொழிக்கான செயலியை பிரபல இயக்குனர் குல்சார், உத்தரப்பிரதேச மாநிலத்துக்கான செயலியை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்தும் தொடங்கிவைத்தார்கள். பிகாருக்கான ஈடிவி பாரத் செயலியை அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், சத்தீஸ்கருக்கான செயலியை அம்மாநில முதலமைச்சர் பூபேஸ் பாகல், ஹரியானாவுக்கான செயலியை அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், இமச்சலப்பிரதேசத்தின் செயலியை அம்மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஈடிவி பாரத் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட விழா!

ஜார்க்கன்டுக்கான செயலியை அம்மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸும், மத்தியப் பிரதேசத்துக்கான செயலியை முதல்வர் கமல் நாத்தும், ராஜஸ்தானுக்கான செயலியை அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டும் தொடங்கி வைத்தார்கள்.

பலதரப்பட்ட தேசிய செய்திகளையும் தகவல்களையும் டிஜிட்டல் தளத்தில் தரமான முறையில் வழங்க, கோடிக்கணக்கான மக்களின் கைகளில் ஈடிவி பாரத் செயலி செல்லவுள்ளது

Last Updated : Mar 21, 2019, 8:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details