அதிமுக சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பாஜவுக்கு ஆதரவு: இபிஎஸ் - ஓபிஎஸ் அறிக்கை - எடப்பாடி பழனிசாமி
சென்னை: கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக ஆதரவளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு அந்தந்த மாநிலங்களில் உள்ள அதிமுகவினர் தங்களது ஆதரவை வழங்க வேண்டும் என பாஜக கேட்டுக்கொண்டது. அதன்படி, மேற்கூறிய மாநிலங்களில் உள்ள மாநில நிர்வாகிகளிடம் அனைத்துத் தரப்பிலும் செயல்படும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அந்தந்த மாநிலங்களில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.