பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கியது.
பொறியியல் படிப்பில் சேர எப்போது வரை விண்ணப்பிக்கலாம்?
சென்னை: பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவரும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநருமான விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழுத் தலைவரும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநருமான விவேகானந்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 'பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு மே 31ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் பொறுமையாக விண்ணப்பிக்கலாம்' எனக் கூறினார்.
மேலும் ஜூன் மாதம் 6ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள 42 பொறியியல் உதவி சேர்க்கை மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். ஜூன் மாதம் 17ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை முதல் வாரத்தில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.