தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படும் அறிவிக்கப்படாத கல்விக் கொள்கையால் தமிழ் வழிக்கல்வி கேள்விக்குறியாகி வருவதாகவும், தமிழ்வழிக் கல்வியை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால் தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் சார்பில் எழும்பூரில் கல்வியாளர்களால் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்ற பின்னர் இவ்வமைப்பின் செயற்குழு உறுப்பினர் அரங்க குணசேகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையிலும் தமிழ் வழியில் கல்வி பெற்றிட அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அரசு நடத்தும், பொறியியல், வேளாண்மை, மருத்துவம், விவசாயம், சட்டம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தமிழில் படித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கி அவர்களுக்கே வேலை வாய்ப்பினை வழங்கிட வேண்டும்.
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் -கல்வியாளர்கள் கோரிக்கை மேலும், கல்வியை பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர தற்போது தேர்வாகியுள்ள எம்.பி.க்கள் மக்களவையில் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.