தமிழ்நாட்டில் 18 சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தலும் 39 மக்களவை தொகுதிகளுக்கும் தேர்தலும் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் குறித்து ஆலோசிக்க இந்திய தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா உள்ளிட்டோர் கடந்த திங்கள் அன்று சென்னை வந்தனர்.
நெருங்கும் மக்களவை தேர்தல்: தலைமைச் செயலருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை! - தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்
சென்னை: மக்களவை தேர்தல் குறித்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன், தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.
sunil arora
இந்நிலையில் சட்டம் ஒழுங்கு நிலைமை தொடர்பாக தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
மேலும், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடனும், தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.